Connect with us

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அஜித் – தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் விஜய்

Cinema News

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அஜித் – தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் விஜய்

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் அஜித்திடம் நலம் விசாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த இரு நாட்களுக்கு முன் உடல் பரிசோதனைக்குச் சென்றதாகவும் அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாககவும் சில மணி நேரத்தில் அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்திருந்தார் .

பின்னர் அஜித்தை தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய அஜித்தின் உடல் நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் அஜித்திடம் நலம் விசாரித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top