Connect with us

ஆஸ்கர் அகாடமியில் கமல் ஹாசனுக்கு அழைப்பு – திரைத்துறையினரிடையே குவியும் வாழ்த்துக்கள்..

Featured

ஆஸ்கர் அகாடமியில் கமல் ஹாசனுக்கு அழைப்பு – திரைத்துறையினரிடையே குவியும் வாழ்த்துக்கள்..

திரைத்துறையின் மிக முக்கியமான விருதான ஆஸ்கர் விருதுகளை வழங்கும் Academy of Motion Picture Arts and Sciences, இந்திய நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவுக்கு வாக்களிக்கும் உறுப்பினராக அமைய அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்புக்கு கமல் ஹாசனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜேசன் மமோவா, ஆரியானா கிராண்டே, மிக்கி மேடிசன் உள்ளிட்ட மொத்தம் 534 பேர் இந்த ஆண்டு அகாடமியின் உறுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உறுப்பினர்கள் அகாடமியின் 19 கிளைகளில் ஒன்றில் சேர்வதோடு அல்லது தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக துணை உறுப்பினர்கள் என அழைக்கப்படும் வகையில் இடம் பெறக்கூடியவர்கள். கிளைகளில் இடம்பெறும் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் பிரதிநிதிகள் ஆஸ்கர் விருதுகளுக்கான வாக்களிப்பில் பங்கேற்கலாம். மேலும் அகாடமியின் நிர்வாக தேர்தல்களில் போட்டியிடும் தகுதியும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. துணை உறுப்பினர்களுக்கு ஆஸ்கர் விருதுகளில் வாக்களிக்கும் உரிமையோ, நிர்வாக பொறுப்புகளுக்கான வாய்ப்போ இருப்பதில்லை. இந்த புதிய சேர்க்கை, உலகதிரைத்துறையில் இந்தியாவின் ஒலி மேலும் வலுப்பெறும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹனிமூன் பற்றியப் பதிவால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய த்ரிஷா!

More in Featured

To Top