Connect with us

மார்கன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

Featured

மார்கன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன் 1 மற்றும் 2’ போன்ற வெற்றி படங்களை அளித்த இவர், தற்போது ‘மார்கன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ‘மார்கன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மார்கன்’ உலகமெங்கும் முதல் நாள் மட்டுமே ரூ.1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இப்படம் இன்னும் எவ்வாறு வரவேற்பைப் பெறும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top