Connect with us

நடிகர் கமல் ஹாசனின் உண்மையான சொத்து மதிப்பு வெளியானது… அதில் இத்தனை கோடி கடன் இருக்கிறதா!

Featured

நடிகர் கமல் ஹாசனின் உண்மையான சொத்து மதிப்பு வெளியானது… அதில் இத்தனை கோடி கடன் இருக்கிறதா!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் சமீபத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் சேர்த்து தனது சொத்து விவரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

அந்த விவரங்களின்படி, கமல் ஹாசனிடம் ரூ.59.60 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், ரூ.245.86 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.49.67 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காருகளின் பட்டியலிலும் கமல் ஹாசன் தனக்குச் சொந்தமானதாக மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டப்ள்யூ மற்றும் லக்சஸ் என மொத்தம் நான்கு கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Featured

To Top