Connect with us

காளிதாஸ் ஜெயராம்க்கு அழகாக முடிந்த நிச்சயதார்த்தம்…வைரலாகும் போட்டோஸ்!

Cinema News

காளிதாஸ் ஜெயராம்க்கு அழகாக முடிந்த நிச்சயதார்த்தம்…வைரலாகும் போட்டோஸ்!

காளிதாஸ் ஜெயராம் தனது ஏழு வயதில் மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்….அதில் இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்…மேலும் இந்த படத்திற்காக பல விருதுகளை பெற்றார்..இது பெரிதளவில் அவருக்கு கை கொடுத்து இருந்தது..

பின்னர் 2016-ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பூமரம் என்னும் படத்தின் மூலம் மீண்டும் மலையாள படத்திற்கு திரும்பினார்…அங்கு இவருக்கு நல்ல பெண் ரசிகர்கள் கிடைத்தனர்…

இவர் திருநங்கையாக நடித்த ‘நவரசா’ என்ற வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டும் இன்றி, காளிதாசுக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது…இது தமிழ் ரசிகர்களை பெரிதாக இருந்தது..

அது போல் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருப்பார்.சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருந்தாலும் மாஸ் காட்சியாக இருந்தது..

கடைசியாக இவர் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் காளிதாஸ், சமீபத்தில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய காதலை உறுதி செய்தார்..

இவரின் காதலி பெயர் தாரிணி .. இவர் 2019-ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.இவரின் நிச்சயதார்த்தத்தில் பல பிரபலங்கள் வந்த புகைப்படம் வந்து வைரல் ஆகி வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Cinema News

To Top