Connect with us

சர்ச்சைக்குரிய காட்சியில் ஜோதிகா – வைரலாகும் புகைப்படம்..

Featured

சர்ச்சைக்குரிய காட்சியில் ஜோதிகா – வைரலாகும் புகைப்படம்..

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் “உடன்பிறப்பே” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.

இதை தொடர்ந்து மலையாளத்தில் “காதல் தி கோர்” படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்தார். இதன்பின் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு “சைத்தான்” மற்றும் “ஸ்ரீகாந்த்” ஆகிய திரைப்படங்கள் இந்தியில் வெளிவந்தது. இந்த ஆண்டு “Dabba Cartel” என்ற வெப் தொடர் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளிவந்த இந்த வெப் தொடரில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள ஜோதிகா, சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top