Connect with us

“ஜோஜு ஜார்ஜின் நடிப்பில் வெளியான ‘புலிமடா’ படம் OTTயில் எப்போது வெளியாகிறது?!”

Cinema News

“ஜோஜு ஜார்ஜின் நடிப்பில் வெளியான ‘புலிமடா’ படம் OTTயில் எப்போது வெளியாகிறது?!”

கடந்த 2016-ம் ஆண்டு மம்மூட்டி – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘புதிய நியமம்’ மலையாள படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் AK சாஜன் இயக்கியுள்ள படம் ‘புலிமடா’. ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், செம்பன் வினோத், லிஜோ மோல் ஜோஸ், ஜாஃபர் இடுக்கி, ஜான் ஆண்டனி, சோனா நாயர், ஜீயோ பேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்துக்கு இஷான் தேவ், அனில் ஜான்சன் இணைந்து இசையமைத்துள்ளனர். த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் 23ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் அடுத்ததாக ‘ஆண்டனி’ மலையாள படம் அதே நவம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Cinema News

To Top