Connect with us

வெற்றி கூட்டணி மீண்டும் களத்தில் – “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!

Featured

வெற்றி கூட்டணி மீண்டும் களத்தில் – “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!

நடிகர் ஜீவா மற்றும் பிளாக் திரைப்பட இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இணையும் புதிய திரைப்படம் “ஜீவா 46” இனிதே பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, வெற்றிப் படமான பிளாக் இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணியுடன் மீண்டும் இணைவது industryயில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீவாவின் 46-வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, கே.ஆர். குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பாளராக முத்துக்குமார் ராமநாதன் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரபியா கட்டூன் நாயகியாக அறிமுகமாகிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழா எளிமையான பூஜையுடன் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரி மற்றும் திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக கோகுல் பெனாய், எடிட்டராக ஆர்.எஸ். சதீஷ்குமார், புரொடக்சன் டிசைனராக சிவசங்கர், உடை வடிவமைப்பாளராக ரிதேஷ் செல்வராஜ், மேக்கப் ஆர்டிஸ்டாக விக்ரம், பிராஜக்ட் டிசைனராக வினிதா குமாரி, மக்கள் தொடர்புத் துறையில் சதீஷ்குமார் (S2 Media) ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் மீதான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top