Connect with us

2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்..!!

Jayawardene

Featured

2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்..!!

விரைவில் நடைபெற இருக்கும் 2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் IPL கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது . அந்தவகையில் நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அணிகளில் ஒன்றாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை அதிக முறை கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் 2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இவர் ஏற்கெனவே 2017 முதல் 2022 வரை மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top