Connect with us

ஜான்வி கபூரின் சிறப்பு – பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..

Featured

ஜான்வி கபூரின் சிறப்பு – பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..

80களில் தமிழில் புகழின் உச்சத்தில் இருந்த டாப் நாயகிகளான நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவில் பெரும் ரசிகர்களைப் பெற்றார்.

ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போதே, அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கினாள். பாலிவுட் படங்களில் நடிப்பதைத் தாண்டி, சமீபத்தில் ஜான்வி தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். அதன்படி, ஜுனியர் என்டிஆருடன் “தேவாரா” படத்தில் நடித்து, தற்போது ராம் சரணுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சி ஜான்வி கபூரை பாராட்டி, “ஜான்வி, அவரது அம்மா ஸ்ரீதேவி போல ஒரு சிறந்த நடிகை. அவரிடம் இருந்த அந்த ஸ்பார்க், தற்போது ஜான்வியிடம் உள்ளது. அதை வேறு யாரிடமும் காண முடியாது. ஜான்வி திரையில் வரும்போது, நம் கண்களை அவளிடமிருந்து நகர்த்த முடியாது. இது ஒரு நடிகையிடம் இருக்க வேண்டிய அற்புதமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்! அபிஷன் ஜீவிந்த் அறிமுக படம் ‘With Love’🔥”

More in Featured

To Top