Connect with us

பிக் பாஸ் 9, கேமா இல்ல காமெடியா? கடுமையாக தாக்கிய சீரியல் நடிகை

bigg boss 9

Cinema News

பிக் பாஸ் 9, கேமா இல்ல காமெடியா? கடுமையாக தாக்கிய சீரியல் நடிகை

Bigg Boss 9: பிக் பாஸ் 9 தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த சீசன் பல சர்ச்சைகளால் நிறைந்திருக்கிறது. போட்டியாளர்களை தேர்வு செய்த விதமே நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பிரபலமா இல்ல, பிரச்சனையா இருந்தாலே போதும்” என்ற மாதிரி தான் போட்டியாளர்களை அனுப்பியிருக்கிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போட்டியாளர்களுக்கிடையே சண்டை, குழு அரசியல், அடிக்கடி உருவாகும் டிராமா — எல்லாம் இணையத்தில் பேசப்படும் முக்கிய விஷயங்களாக மாறிவிட்டன. இதனுடன் ஷோவை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி கூட சில சமயம் நெட்டிசன்களின் ட்ரோல்களிலிருந்து தப்ப முடியாமல் போயிருக்கிறார். அவரது ஹோஸ்டிங் ஸ்டைல் பற்றியும் இணையத்தில் கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ஃபரினா அஜித் (Farina Azad) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றி தன் நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். “இந்த சீசனில் சிலர் உண்மையிலேயே நல்ல கேம் விளையாடுறாங்க. ஆனால் சிலர் வெறும் டிரிகர் கேம் தான் விளையாடுறாங்க!”

என்று தொடங்கி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி தனித்தனியாக விமர்சனம் கூறியுள்ளார். குறிப்பாக தர்பூஸ் திவாகர் மற்றும் வினோத் காம்போவைப் பற்றி பேசும் போது,“இவர்களிருவரும் மிக நல்ல energy கொண்டவர்கள். அவர்கள் சேர்ந்து வரும்போது house atmosphere positive-ஆ மாறுகிறது” என்று பாராட்டியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், பார்வதி குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.“பார்வதி இப்போ கேவலமான trigger game விளையாடுறாங்க. unnecessary provocation-ஐ use பண்ணி attention வாங்குறாங்க. இது genuine game இல்லை” என்று ஃபரினா கூர்மையான வார்த்தைகளில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சிலர் “camera time”க்காக மட்டுமே unnecessary fights create பண்ணுறாங்க என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஃபரினாவின் இந்த open review தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிலர் அவரது நேர்மையான கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொருபக்கம் “அவங்க தாமே future contestant ஆக வரப் போறாங்கன்னு build up வைக்குறாங்க” என்று நகைச்சுவையாக ட்ரோல் செய்கிறார்கள்.

எப்படியிருந்தாலும், ஃபரினாவின் இந்த பதிவு பிக் பாஸ் 9 ரசிகர்களிடையே புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது என்பது உறுதி!

More in Cinema News

To Top