Connect with us

IPL 2024 : 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி..!!!

Featured

IPL 2024 : 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து டெல்லி அணி எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முடிவில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக இளம் புலி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் அணிக்கு தேவையான ரன்களை எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களில் கேட்ச் கொடுத்து பெவிலியன் நோக்கி செல்ல அடுத்த சில பந்துகளில் பட்லரும் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் .

அடுத்து வந்த ரியான் பராக் அணியின் பொறுப்பை எடுத்துக்கொண்டு நிதானமாக ஆடி தேவையான ரன்களை எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

இறுதி வரை சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 6 சிக்சர்களை விளாசி 85 ரன்களுடனும், ஹெட்மயர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 185 ரன்களைச் குவித்தது .

இதையடுத்து தற்போது 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களத்தில் விளையாடியது.

ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ச் 23 ரன்களிலும் ரிக்கி புஹி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டேவிட் வார்னர் ப்ரொப்புடன் ஆடி 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் நிதானமாக ஆடிய பந்த், 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற அடுத்த வந்த அபிஷேக் 9 ரன்களில் வந்த வழி பார்த்து சென்றார்.

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் 12 ரன்களில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு தொடரில் டெல்லி அணி 2 தோல்வியும் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top