Connect with us

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதல்..!!

Featured

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மும்பை – கொல்கத்தா அணிகள் மோதல்..!!

பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பிய இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 60 ஆவது லீக் போட்டியில் MI – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 8 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளது.

இதில் நடப்பு தொடர் முழுவதும் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு கடுமையான ஆட்டத்தை கொடுத்து அதன் வெற்றியை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Featured

To Top