Connect with us

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு..!!

Featured

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் விளையாட உள்ளனர்.

நடப்பு தொடரில் பெங்களூரு அணி எதிர்கொண்ட இரண்டு போட்டியில் ஒன்றில் தோல்வியும் ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் நடப்பு தொடரில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி இறுதி நேரத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top