Connect with us

IPL 2024 : சுத்தி சுத்தி அடித்த அபிஷேக் சர்மா – சிஎஸ்கேவை எளிதில் வீழ்த்தியது ஹைதராபாத்

Featured

IPL 2024 : சுத்தி சுத்தி அடித்த அபிஷேக் சர்மா – சிஎஸ்கேவை எளிதில் வீழ்த்தியது ஹைதராபாத்

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய ஹைதராபாத் அணி சென்னை அணியை அசால்டாக வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றஸ் போட்டியில் CSK – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை சேர்ப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் 12 ரன்களில் ஆட்டமிழக்க . நிதான ஆடி வந்த ருதுராஜ் 26 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .

இதையடுத்து ரஹானே – துபே இணை அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் சிக்ஸர்களாக விளாசிய துபே அரைசதம் கடந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் வெளியேறினார் .

அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 35 ரன்களில் கிளம்ப இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 165 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஹைதராபாத் அணி களத்தில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர் . எளிய இலக்கு என்றாலும் போட்டியை விரைவாக முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் அதிரடி காட்டினர்.

அதிலும் குறிப்பாக சென்னை அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அபிஷேக் 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த மார்க்கரம் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களை ஓரளவு நிதானமாக ஆட 18.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

More in Featured

To Top