Connect with us

தெலங்கானா துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்..!!

Featured

தெலங்கானா துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்..!!

தெலங்கானாவில் துணை காவல் கண்காணிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் அட்டகாசமாக விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வென்றது .

திட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பின் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை தாயகம் கொண்டு வந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

அந்தவகையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு, தெலங்கானா மாநில அரசு பணி மற்றும் ஹைதராபாத்தில் புது வீடு ஒன்றையும் வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார் .

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான பங்களிப்புக்காக முகமது சிராஜ்-க்கு தெலங்கானா அரசு டிஎஸ்பி பதவி வழங்கிய நிலையில் இன்று தெலங்கானா துணை காவல் கண்காணிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top