Connect with us

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் முகமது ஷமி விலகல்..!!

Featured

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் முகமது ஷமி விலகல்..!!

விரைவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி தற்போது ஆயத்தமாகி வருகிறது .

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நாள் ஒருநாள் உலகக் கோப்பையில் ஷமியின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது .

உலகக்கோப்பை தொடரின் அணைத்து போட்டியிலும் பட்டயகிளப்பிய ஷமியின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் அணைத்து அணி வீரர்களும் வந்த வழியில் வந்த வேகத்தில் சென்றனர் .

இந்நிலையில் தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கும் ஷமி ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி இருக்கும் நிலையிக் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தும் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து BCCI தலைவர் ஜெய்ஷா கூறுகையில் :

இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ஷமி விலகி இருப்பதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Suriya 47 Begins! பூஜை புகைப்படங்கள் வெளியானதும் வைரலாகி Trending 🔥"

More in Featured

To Top