Connect with us

“நான் செய்த பிழைகளை…” – சர்ச்சையின் மத்தியில் இந்திரஜா வெளியிட்ட வீடியோ வைரலாகிறது..

Featured

“நான் செய்த பிழைகளை…” – சர்ச்சையின் மத்தியில் இந்திரஜா வெளியிட்ட வீடியோ வைரலாகிறது..

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். வெள்ளித்திரையிலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தவர், முன்னணி நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநாட்டியுள்ளார். இடையில் உடல் நலக்குறைவால் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிப்புத் துறையில் பிசியாக வலம் வருகிறார்.

இவரது மகள் இந்திரஜா, ‘பிகில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் அண்மையில் தங்களது யூடியூப் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குழந்தைகளின் சிந்தனைத் திறன் தற்போது மிகக் குறைந்துவிட்டது” என்று கருத்து தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குருபூர்ணிமாவை முன்னிட்டு இந்திரஜா “நான் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பாய் அம்மா” என்ற பாடலை பாடி வெளியிட்டுள்ளார். சர்ச்சையை மையமாகக் கொண்ட இந்த நேரத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top