Connect with us

இரண்டாவது T20 ஆட்டத்திலும் இந்திய அணி அபாரம்…வெற்றிமீது வெற்றி!

Sports

இரண்டாவது T20 ஆட்டத்திலும் இந்திய அணி அபாரம்…வெற்றிமீது வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை படைத்து இருக்கின்றது…ரசிகர்களுக்கு விருந்து என சொல்லும் வகையில் இந்த ஆட்டம் அமைந்து இருக்கின்றது..

236 ரன்கள் இலக்கை அடிக்க நினைத்த ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் சுமாரான துவக்கமே கிடைத்தது…மேத்யூ ஷார்ட் 19 ரன்களில் முதல் அவுட் ஆகி வெளியே போனார்…கடந்த போட்டியில் சதமடித்த ஜோஷ் இங்கிலிஷ் இம்முறை 2 ரன்களில் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 12, ஸ்மித் 19 ரன்கள் என ஆஸ்திரேலிய அணியின் இந்திய பவுலர்கள் எளிதாக வீழ்த்தினர்…இப்படி ஒரு பெரிய சம்பவத்தை இந்திய அணி செய்திருந்தது..

இதன்பின் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் இணைந்து ஓரளவுக்கு அணியை கொண்டு சென்றனர்…இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். டிம் டேவிட் 37 ரன்களில் வீழ, ஸ்டோய்னிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்…இப்படி இருந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை பெற்றுவிட்டது…

இந்திய அணி இப்படி ஒரு ஆட்டத்தை கொடுத்து இரண்டாவது வெற்றியை பெற்று விட்டனர்…இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்…சிறந்த பேட்டிங் என்று சொன்னால் ஜெய்ஷ்வால்,ருதுராஜ்,இஷான்,ரிங்கு என இந்தியாவை சிறப்பான பாதைக்கு எடுத்து சென்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாஸ் அப்டேட்! ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் ஃபர்ஸ்ட் லுக் 🔥

More in Sports

To Top