Connect with us

மூன்றாவது T20..!இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..வெற்றி யாருக்கு!

Sports

மூன்றாவது T20..!இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..வெற்றி யாருக்கு!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது….இப்போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியா இந்த T 20 வின்னர் என்று ஆகிவிடும்..

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் அதனை போல திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது…இப்படி நல்ல அட்டத்தை கொடுத்து மிக பெரிய இடத்திற்கு இந்திய அணி சென்று இருக்கின்றது…

அதனை போல இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை மீண்டும் சந்திக்கிறது இந்திய அணி…இந்த வெற்றி அணியில் மாற்றம் இருக்காது என்று தான் தெரிகின்றது…

யஷஸ்வி ஜெய்ஸ்வால்,ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்கத்திலும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நடு வரிசையிலும் ரிங்கு சிங் இறுதிக்கட்ட ஓவர்களை அடித்து தோம்சம் செய்வார்கள் என்றும் சொல்லலாம்..பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா,ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்…

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆட்டத்தில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகின்றது..பந்து வீச்சு,பேட்டிங் என இரண்டும் சுமாராக தான் இருக்கின்றது…என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Sports

To Top