Connect with us

தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை காட்டம்..!!

Featured

தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை காட்டம்..!!

பொதிகை தொலைக்காட்சியின் பெயரை டிடி தமிழ் என மாற்றம் செய்தது பாஜகவின் குறுகிய எண்ணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார் .

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Rowdy Janardhan Buzz 🚀 Vijay Deverakondaக்கு எதிரி Vijay Sethupathi!

More in Featured

To Top