Connect with us

இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு – முதல்வர் ஸ்டாலின் சூளுரை

Featured

இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு – முதல்வர் ஸ்டாலின் சூளுரை

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதில் இன்று திருவாரூரில் நடைபெற்ற திமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு கூடிருந்த மக்களிடம் எழுச்சி உரையாற்றினார்.

நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன்; உங்களின் ஒருவனாய் உங்களிடம் உரிமையோடு வாக்குகள் கேட்டு வந்துள்ளேன்

இனியும் மோடியின் ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு

சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள் கலைஞர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடி அவர்களே… நாங்கள் தென்றலைத் தீண்டியதில்லை ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறோம்.

பிரதமர் அவர்களே அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள். அப்போதுதான் எங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாதவர் வாக்கு மட்டும் கேட்டு வாராரே என்று உங்கள்மீதும், பாஜகவின் மீதும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் கோபம் அடங்காமல் அதிகமாகும்.

பாஜகவிற்கு போடக்கூடிய ஓட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கக்கூடிய வேட்டு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐபிஎல் அதிரடி அப்டேட்! 🏏 பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய ஸ்பின் பயிற்சியாளர் நியமனம்!

More in Featured

To Top