Connect with us

“அவர்கள் செய்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது – பகீர் விளக்கம் கொடுத்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ..!!

Featured

“அவர்கள் செய்தது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது – பகீர் விளக்கம் கொடுத்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ..!!

வீட்டு வேலைக்காக வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகியதாக செய்தி வெளியாகி உள்ளது.

தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை .

இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

அந்த இளம் பெண்ணை தினந்தோறும் துன்புறுத்தி வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

எளிய மனிதர்கள் மீது தொடுக்கப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும் என பலரும் ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டு வேலைக்காக வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எம்எல்ஏ கருணாநிதி கூறியதாவது :

எனது மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அவர்களின் வீட்டில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.

இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை தனது மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி கொடுத்துள்ள விளக்கம் தற்போது வைரலாக பரவி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Featured

To Top