Connect with us

மருத்துவரான நடிகை மஞ்சு வாரியரின் மகள் – வைரல் போட்டோ..!!

Cinema News

மருத்துவரான நடிகை மஞ்சு வாரியரின் மகள் – வைரல் போட்டோ..!!

பிரபல தென்னிந்திய நடிகை மஞ்சு வாரியரின் மகள் மருத்துவர் படிப்பை முடித்துள்ளதாக மஞ்சு வாரியரின் முன்னாள் கணவர் திலிப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். சின்னத்திரையில் அறிமுகமான இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.

பிரபல மலையாள நடிகரான திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை மஞ்சு வாரியர் அவருடனான கருத்துவேறுபாடால் விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார் . விவாகரத்திற்கு பிறகு மீனாட்சி அப்பா உடன் சென்று வாழ்ந்து வருகிறார் .

ஒரு பக்கம் மஞ்சு வாரியர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாயாக அனைத்தையும் செய்து வருகிறார் .

இந்நிலையில் மீனாட்சி சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவர் படிப்பை படித்து வந்த நிலையில் அவரது அவர் நல்லபடியாக படித்து டாக்டர் ஆகி இருக்கிறார்.

மகள் பட்டம் பெற்றிருக்கும் போட்டோவை திலீப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top