Connect with us

இரவு முழுவதும் வெளுத்துவாங்கிய கனமழை – 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Featured

இரவு முழுவதும் வெளுத்துவாங்கிய கனமழை – 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை வெளுத்துவாங்கிய நிலையில் இன்று சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை.

தென்காசி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.20) விடுமுறை.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சினிமாவை விட கச்சேரியால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஹிப்‌ஹாப் ஆதி!

More in Featured

To Top