Connect with us

டபுள் சந்தோஷத்தில் இயக்குநர் ஷங்கர் – ‘Game Changer’ படத்தின் சூப்பர் அப்டேட் இதோ..!!

Cinema News

டபுள் சந்தோஷத்தில் இயக்குநர் ஷங்கர் – ‘Game Changer’ படத்தின் சூப்பர் அப்டேட் இதோ..!!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இருந்து டக்கரான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ஷங்கரின் இயக்கத்தில் உருவான இந்திய 2 படம் வரும் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இவரது இயக்கத்தில் மறுபுறம் உருவான படமே ‘கேம் சேஞ்சர்’ .

மிகவும் சவால் மிக்க படமாக பார்க்கப்படும் இப்படத்தில் நாயகனாக ராம்சரண் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் SJ சூர்யா, அஞ்சலி, நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தில்ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் அடுத்த சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக ராம் சரண் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் முதல் நாள் புகைப்படத்தையும், இறுதி நாள் புகைப்படத்தையும் பகிர்ந்து படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே : குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா -வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top