Connect with us

விஜய் ஆண்டனியின் `மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஓடிடி அப்டேட் இதோ..!!

Cinema News

விஜய் ஆண்டனியின் `மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஓடிடி அப்டேட் இதோ..!!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியாக ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த டக்கர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி திடீரென ஹீரோவாக உருமாறி இன்று கலக்கல் நாயகனாக கலக்கி வருகிறார் .

இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி திரையரங்குகளில் வெளியான திரைப்படமே மழை பிடிக்காத மனிதன்.

விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் , சரத்குமார் , மேகா ஆகாஷ் ஆகியோருடன் பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் தரமாக தயாரான இப்படம் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரமில் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top