Connect with us

விரைவில் OTTயில் வெளியாகவுள்ளது ஹரிஷ் கல்யாணின் Parking திரைப்படம்!

Cinema News

விரைவில் OTTயில் வெளியாகவுள்ளது ஹரிஷ் கல்யாணின் Parking திரைப்படம்!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டின் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படங்கள் பட்டியலில் ‘பார்கிங்’ படமும் இணைந்தது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் பட்ஜெட்டை தாண்டி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஈகோ’வால் நடக்கும் சம்பவங்களையும் மனித மனங்களில் அகம்பாவத்தையும் பதிவு செய்த விதத்தில் படம் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆறுதல் வெற்றி பெறப்போவது யார்..? லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top