Connect with us

ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு..!!

Featured

ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு..!!

பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபா கர்மாகர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை, காமன்வெல்த் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்.

இதுநாள் வரை தனது விளையாட்டில் கடின உழைப்பை போட்டு பல பதக்கங்களை வென்று குவித்த தீபா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 0.15 விநாடியில் பதக்க வாய்ப்பை இழந்தார். இருப்பினும் தனது விளையாட்டின் மீது அதிக கவனமும் பறிச்சியும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை என்ற பெருமையை கொண்ட, தீபா கர்மாகர் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் தற்போது அவரின் அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top