Connect with us

“நடிகர் தனுஷின் அடுத்தடுத்தம் படங்களுக்கு இசையமைக்கும் GV பிரகாஷ்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!”

Cinema News

“நடிகர் தனுஷின் அடுத்தடுத்தம் படங்களுக்கு இசையமைக்கும் GV பிரகாஷ்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!”

தனுஷ் நடிக்கும் மூன்று திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து GV பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ’Captain Miller’ என்ற படத்திற்கு GV பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தனுஷ் ’D50’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திலும் GV பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனுஷின் அடுத்த படத்திற்கும் GV பிரகாஷ் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது.

தனுஷ் விரைவில் இன்னொரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தனுஷின் நெருங்கிய உறவினரான வருண் என்பவர் நாயகராக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கும் GV பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ’Captain Miller’, ’D50’ மற்றும் வருண் நடிக்கும் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top