Connect with us

IPL 2024 : பேட்டிங்கில் மிரட்டுமா சென்னை அணி..? டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!

Featured

IPL 2024 : பேட்டிங்கில் மிரட்டுமா சென்னை அணி..? டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி அதில் சிறப்பாக விளையாடி தொடரின் முதல் வெற்றியை ருசித்தது .

இதுபோல் இந்த பக்கம் மும்பை அணியுடன் தனது முதல் போட்டியை சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி அதில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெற போகிறது எந்த அணி முதல் தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ஏகே 64 அப்டேட் – ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது! 🎬

More in Featured

To Top