Connect with us

குரூப்-2 தேர்வு எழுதிய வருங்கால அரசு அதிகாரிகளே இந்த செய்தி உங்களுக்காக தான்..!! முழு விவரம் உள்ளே..

Featured

குரூப்-2 தேர்வு எழுதிய வருங்கால அரசு அதிகாரிகளே இந்த செய்தி உங்களுக்காக தான்..!! முழு விவரம் உள்ளே..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான்.

முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனால் அதைக்கூட 10 மாதங்களாக திருத்தி, முடிவுகளை வெளியிட முடியாத நிலையில் தான் டி.என்.பி.எஸ். சி இருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பானவர்களும், ஆட்சியாளர்களும் போட்டித் தேர்வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கண்டன குரல் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் நாங்கள் எழுதிய தேர்வுக்கு எப்போதான் ரிசல்ட் வரும் என தேர்வர்கள் அனைவரும் காத்திருந்த நேரத்தில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன். தொகுதி- முதன்மை எழுத்துத்தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது.

விண்ணப்பதாரர்கள் குரூப்-2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது எனவே யாரும் தங்களது தேர்வு முடிவுகள் குறித்து கவலை கொள்ளவேண்டாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை ராஷ்மிகா மந்தனா அழகிய உடையில் கிளாமர் Photoshoot Viral..

More in Featured

To Top