Connect with us

ஆளுநரின் பொறுப்பு எழுதிக் கொடுப்பதை படிப்பது தான் – அமைச்சர் உதயநிதி

Featured

ஆளுநரின் பொறுப்பு எழுதிக் கொடுப்பதை படிப்பது தான் – அமைச்சர் உதயநிதி

அரசு என்ன எழுதிக் கொடுக்கிறதோ அதை படிப்பது தான் படிக்க ஆளுநரின் பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :

தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம்.

அரசு என்ன எழுதிக் கொடுக்கிறதோ அதை படிப்பது தான் படிக்க ஆளுநரின் பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.

இதே ஆளுநர் கடந்த ஆண்டு என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார்.

இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள். நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு வெற்றியை தருவீர்கள் என்று நம்புகிறேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏதேதோ தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஆளுநருக்கும் அரசுக்கும் இருக்கும் இந்த பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி - டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

More in Featured

To Top