Connect with us

குட் பேட் அக்லி: ரசிகர்களுக்கான அதிரடி சர்ப்ரைஸ்!

Featured

குட் பேட் அக்லி: ரசிகர்களுக்கான அதிரடி சர்ப்ரைஸ்!

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “குட் பேட் அக்லி”. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில், அவர் வெளியேறிய பின் தற்போது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது, அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும், புக்கிங் இந்த மாதம் இறுதியில் துவங்கும். இந்த நிலையில், “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ பற்றி லேட்டஸ்ட் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவர இருப்பதோடு, தமிழ்நாட்டில் ஏப்ரல் 9ம் தேதி ப்ரீமியர் செய்யப்படுமென கூறப்படுகிறது. அதுவும், ஏப்ரல் 9ம் தேதி இரவு 10.30 மணிக்கு இப்படத்தின் ப்ரீமியர் ஷோ துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  35 நாட்கள் மின்சாரம் வேண்டாம் என்ற கிராமம்! உண்மைச் சம்பவத்தைப் பேசும் ‘கூடு’ திரைப்படம்

More in Featured

To Top