Connect with us

குட் பேட் அக்லி – மாஸ் வேற லெவல்… திரை விமர்சனம்

Featured

குட் பேட் அக்லி – மாஸ் வேற லெவல்… திரை விமர்சனம்

அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவான படம் குட் பேட் அக்லி. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அஜித்தின் ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வந்துள்ள இப்படம், ரசிகர்களை திருப்திப்படுத்துமா?

அஜித் ஒரு கேங்ஸ்டர். அந்த வேலை காரணமாக, அவரது குடும்பம் பிரிக்கப்படுகிறது.
தனது மகனை கூட பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அஜித் போலீஸிடம் சரணடைகிறார். பின்னர் 17 ஆண்டுகள் கழித்து, திருந்தி, மகனை பார்க்க வருகிறார். அங்கு அவரை எதிர்கொள்ளும் சிக்கல் மகனை அர்ஜுன் தாஸ் கைது செய்ய வைக்கிறார்.ஏன் என்பது தான் கதை. இதனால் குட் இருந்த அஜித், பேட் ஆக மாறுகிறார்.
அதன்பின் நிகழும் கதையே இந்த Good Bad Ugly.

அஜித் ஓர் மேன் ஷோ. ஆதிக், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார்.
அஜித்தின் சின்ன சின்ன அனேக ரெபரன்ஸ்கள் படத்தில் கத்தி புடிக்க வைக்கிறது. அப்பா பாசத்தால் கலாய்த்து ஜாலியாக இருந்த அஜித்,
மகனுக்காக மாறும் பேட் பக்கம் சரவெடியா வந்திருக்கு. இடைவேளைக்குள்ளே பாங்க் ஆ, மொட்டையா சீன் மங்காத்தா மாஸ் ரீஎண்ட்ரி மாதிரி தான்.

இரண்டாம் பாதியில் ப்ளாஷ்பேக் தொடங்கும். அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என பல லெயர். பிரசன்னா, சுனில் அஜித்தை பில்டப் செய்ய வருகிறார்கள். சிம்ரனின் எண்ட்ரி, ரசிக்கவைக்கும் வகையில் உள்ளது.

அர்ஜுன் தாஸ் வில்லனாக நன்றாக வேலை செய்திருக்கிறார்.
இரண்டு பசங்க கதாபாத்திரமும் நல்ல வரவேற்பு வாங்கும். ஆனால் சில நெகட்டிவ் புள்ளிகள் இருக்கிறது.

பழைய பாடல், ஓவர் சவுண்ட் கொஞ்சம் சலிப்பை தருகிறது.
லாஜிக்குக்கு இடமில்லாத காட்சிகள். ஒளிப்பதிவில் சில சீன்கள் அழகாக இருந்தாலும், சில இடங்களில் மங்கலாக தெரிகிறது. முடிவில் சொல்ல வேண்டும் என்றால் அஜித் ரசிகர்களுக்கே ஒரு ரசிகர் வித்த விருந்து தான் இந்த Good Bad Ugly.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 Title Winner யார் தெரியுமா?

More in Featured

To Top