Connect with us

ஆமா என்ன சொல்லவரிங்க – ‘குபேரா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

ஆமா என்ன சொல்லவரிங்க – ‘குபேரா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘குபேரா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது .

அந்தவகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படமே குபேரா . பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ள இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இவர்களுடன் நாகர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

க்ளிம்ப்ஸ் வீடியோவில் எந்த வித வசனமும் இடம்பெறாமல் வரும் பின்னணி இசை மட்டுமே வரும் நிலையில் அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் என்ன சொல்ல வருகிறது என தற்போது நெட்டிசன்கள் ஆளாளுக்கு அவர்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss Tamil 10: ஜேசனை அதிரவைத்த ரம்யா கிருஷ்ணன்! குறும்படத்தால் மாறிய காட்சிகள்.. முதல் நாளிலேயே அதிரடி காட்டிய தொகுப்பாளர்!

More in Cinema News

To Top