Connect with us

கொண்டாட்டத்திற்கு தயாரா : இன்று முதல் ஆரம்பமாகிறது ஐபிஎல் திருவிழா..!!

Featured

கொண்டாட்டத்திற்கு தயாரா : இன்று முதல் ஆரம்பமாகிறது ஐபிஎல் திருவிழா..!!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் திருவிழா தொடங்குகிறது . இதையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சென்னை – பெங்களூரு
அணிகள் மோதுகின்றன.

சுமார் 13 வருடங்களாக சென்னை அணியின் கேப்டானக செயல்பட்டு வந்த தோனி நடப்பு தொடரில் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இளம்வீரர் ருதுராஜ் தலைமையின் கீழ் சென்னை அணி முதல் முறை களம் காண உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரசன்னா–சினேகா குடும்பம்: Sweet Moments Steal the Spotlight !

More in Featured

To Top