Connect with us

இந்தியா வருகிறார் கால் பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி..!!

Featured

இந்தியா வருகிறார் கால் பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி..!!

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும் கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக இருக்கும் பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விரைவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் விளையாட மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இந்தியா வரவுள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் அறிவித்துள்ளார்.

எந்த அணியுடன் மோதல் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடைசியாக 2011ல் வெனிசூலா – அர்ஜெண்டினா இடையேயான நட்பு ரீதியான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்நிலையில் உலகெங்கும் மெஸ்ஸிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல் மெஸ்ஸிக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் அவரது தலைமையிலான அணி இந்தியா வரவுள்ள செய்தி கால் பந்து ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “ஜன நாயகன்” படம் மீண்டும் பேசுபொருள் – ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

More in Featured

To Top