Connect with us

“Fight Club படத்தின் ராவணமவனே பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது!”

Cinema News

“Fight Club படத்தின் ராவணமவனே பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது!”

இயக்குநராக அடுத்தடுத்த 5 வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் சமீபத்தில் வெளியான LEO என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து மிரட்டியுள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார். LEO படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தலைவர் 171 படத்தில் லியோ கற்றுக் கொடுத்த படிப்பினைகளை கொண்டு செயல்பட்டு வருவதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் அடுத்தததாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக அவரது தயாரிப்பில் Fight Club என்ற படத்தின் அறிவிப்பும் தொடர்ந்து ரிலீஸ் அறிவிப்பும் வெளியானது. தன்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்களுக்கு இந்த நிறுவனம் மூலம் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

அவரது தயாரிப்பில் முதல் படமாக Fight Club படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் உறியடி மூலம் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி அதிரடி சரவெடியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ள Fight Club படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக வெளியான யாரும் காணாத விண்மீனே பாடல் அதிகமான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ராவணமவனே என்ற பாடல் மிரட்டலான வகையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Cinema News

To Top