Connect with us

சூறைக் காற்றுடன் கரையைக் கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்..!!

Featured

சூறைக் காற்றுடன் கரையைக் கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்..!!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சூறைக் காற்றுடன் கரையைக் கடக்கத் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கனமழையை எதிர்கொள்ள தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் மழை நீர் தேங்கி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள மக்களை முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கப்பட்டு வருகிறது.

மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் . சென்னை உள்பட கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் இன்று இரவு முதல் நாளை காலை வரை பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Featured

To Top