Connect with us

சொர்க்கவாசல் போன்ற நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வர வேண்டும் – செல்வராகவன் புகழாரம்..!!

Cinema News

சொர்க்கவாசல் போன்ற நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் வர வேண்டும் – செல்வராகவன் புகழாரம்..!!

ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்திற்கு நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவான திரைப்படமே சொர்க்கவாசல் . டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் தரமாக தயாரான இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி , செல்வராகவன் , நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று திரையரங்குளில் வெளியான நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது . இந்நிலையில் இப்படத்தை ரசிகர்கள் தாண்டி திரைநட்சத்திரங்களும் பாராட்டி வரும் நிலையில் தற்போது நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சொர்க்கவாசல் படம் குறித்து செல்வராகவன் கூறியதாவது :

சொர்க்கவாசல் படத்தில் இணைந்து நடித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் மனதைக் கவரும் படமாக உள்ளது! நான் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் உண்மையான சினிமா இதுதான்! படத்தை நான் பொக்கிஷம் என்றுதான் சொல்லுவேன்! தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிறையப் படங்கள் வர வேண்டும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top