Connect with us

“மன்னிச்சுடுங்க!” 🙏💥 ரன்வீரின் செயலால் கிளம்பிய கொந்தளிப்பு!

Cinema News

“மன்னிச்சுடுங்க!” 🙏💥 ரன்வீரின் செயலால் கிளம்பிய கொந்தளிப்பு!


கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தில் வரும் தெய்வக் கதாபாத்திரத்தின் முகபாவனைகளை மேடையில் நகைச்சுவையாக பின்பற்றி நடித்தார். ஆனால் அந்த வெளிப்பாடு பலருக்கும் ஏற்றதாக இருக்கவில்லை. குறிப்பாக துளுநாடு பகுதியைச் சேர்ந்த மக்கள், இது அவர்கள் வழிபடும் பெண் தெய்வத்தை அவமதிக்கும் விதமாக இருந்ததாக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா, “ரன்வீர் சிங்கின் இந்த நடிப்பு எங்கள் தெய்வத்தை அவமதிக்கும் செயல். இது எங்கள் மரபையும் நம்பிக்கையையும் புண்படுத்துகிறது” என்று தெரிவித்ததுடன், ரன்வீர் சிங் மட்டுமன்றி அப்போது மேடையில் இருந்த ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த மக்கள் எதிர்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமும் மன்னிப்பும் தெரிவித்து பதிவிட்டார். அதில் அவர், “ரிஷப் ஷெட்டியின் அற்புதமான நடிப்பை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த முகபாவனையை காட்டினேன். யாருடைய உணர்ச்சிகளையும் புண்படுத்தும் நோக்கம் ஒருபோதும் இல்லை. எவருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் இதயம் கனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்குப் பிறகு சர்ச்சை ஓரளவு அடங்கியிருந்தாலும், சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் vs சூர்யா 🔥 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூப்பர் கிளாஷ்!

More in Cinema News

To Top