Connect with us

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Featured

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரேஷன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது. திரு. @mkstalin தலைமையிலான விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்டா பகுதிக்கு புயலாய் வந்த எடப்பாடி! 🔥 திமுக கோட்டையில் அதிமுக அதிரடி – பின்னணி தகவல் வெளிச்சம்!

More in Featured

To Top