Connect with us

எமி ஜாக்சன்: மீண்டும் நடிப்பில், மகன்களை பற்றி பகிர்ந்த எமோஷ்னல் அனுபவம்..

Featured

எமி ஜாக்சன்: மீண்டும் நடிப்பில், மகன்களை பற்றி பகிர்ந்த எமோஷ்னல் அனுபவம்..

எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் “மதராசபட்டினம்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பின் “தாண்டவம்”, “தெறி”, “ஐ”, “2.0” ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக, அருண் விஜய் நடிப்பில் வெளியான “மிஷன் சாப்டர் 1” படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.

நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அவர்கள் பிரிந்த பிறகு ஹாலிவுட் நடிகரான எட்வெஸ்ட்விக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றுள்ளனர். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்த எமி ஜாக்சன், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சுமார் ஒரு ஆண்டுக்கு பின் மகனை பிரிந்து, முதல்முறையாக வேலைக்கு செல்லுவது மிகவும் கடினமாக உள்ளது. எப்போது வீடு திரும்பி என் மகன்களை பார்க்க போகிறேன் என்ற ஏக்கம் உள்ளது. இந்த பிரிவு, கஷ்டம் அனைத்தும் என் மகன்களுக்கு தான் என்பதை நினைக்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top