Connect with us

நயன்தாரா செட் ஆகல.. வேறு நடிகையைத் தேடும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. பின்னணி என்ன?

Vignesh_Shivan_Nayanthara

Cinema News

நயன்தாரா செட் ஆகல.. வேறு நடிகையைத் தேடும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. பின்னணி என்ன?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது எல்ஐசி படத்திற்கு மனைவியும் நடிகையுமான நயன்தாரா செட் ஆகமாட்டார் என வேறொரு நடிகையை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012இல் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அந்த படம் தோல்வி அடைந்தாலும் அடுத்து இயக்கிய நானும் ரவுடிதான் மூலம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

அதன் பிறகு தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாராவை நடிக்கவைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், அக்கா கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பட்ஜெட் கொடுக்க முடியாது என தயாரிப்பு தரப்பில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

இதனால், நயன்தாராவுக்கு பதிலாக வேறொரு நடிகையை விக்னேஷ் சிவன் தேடி வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையே படத்தின் தலைப்பிற்கு எதிராக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், தலைப்பை மாற்றுமாறு நோட்டீஸ் அனுப்பி படத்தலைப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி - பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top