Connect with us

வட சென்னை 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்!

Cinema News

வட சென்னை 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமாக அமைந்தவை. சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருபவை. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து படங்களை இயக்கிவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்தது. இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் சூரி நாயகனாக நடித்தது, விஜய் சேதுபதியின் நடிப்பு என படத்தின் பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்திலும் சூரி மற்றும் விஜய் சேதுபதி லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் அவருக்கான காட்சிகளை வெற்றிமாறன் அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக அவரது இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது வடசென்னை 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய அதிர்வுகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார் வெற்றிமாறன். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் விரைவில் வட சென்னை 2 படம் வெளியாகும் என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

வெற்றிமாறன் மேடை ஏறி விருதை பெற்றவுடன் ரசிகர்கள் அவரிடம் வடசென்னை படம் குறித்த அப்டேட்டை கேட்கத் துவங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் அவர் அந்தப்படம் விரைவில் வருது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பல குறைகள் மற்றும் தவறுகளுடன் தான் எடுத்து முடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் கதைக்களம் பாதிக்கப்படாதபடி சில சமரசங்களை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இதை குறைத்துக் கொள்ள முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார். சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் படங்களை உருவாக்கவே தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத் மண்ணில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா குஜராத்..!!

More in Cinema News

To Top