Connect with us

லாரன்ஸ் படத்தின் இயக்குனர் மறைவு..வருத்தத்தில் திரையுலகினர்!

Cinema News

லாரன்ஸ் படத்தின் இயக்குனர் மறைவு..வருத்தத்தில் திரையுலகினர்!

நம் தமிழ் சினிமாவில் இப்போது நமக்கு ராகவா லாரன்ஸ் என்பவர் நன்கு தெரியும்…அப்படி ஆவதற்கு முன்பாக லாரன்ஸாக சினிமாவில் ஹீரோவாக அற்புதம் படத்தில் அறிமுகமானார்…அவரின் பயணம் அப்படி தான் ஆரம்பம் ஆனது…

அந்த படத்தை இயக்கிய இயக்குநர் அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தொன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்…அது பெரிதும் அதிர்ச்சி தந்தது…சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்…பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கின்றது.

ராகவா லாரன்ஸ் நடித்த அற்புதம் திரைப்படம் மட்டுமன்றி 2006-ல் ஷாம், நித்யா தாஸ் நடிப்பில் வெளியான மனதோடு மழைக்காலம் மற்றும் செப்பவே சிறு காளி உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது…அவருக்கு சினிமாவில் நல்ல ஒரு பெயர் இருந்து இருக்கின்றது…

ராகவா லாரன்ஸை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நடிகர் ஷாமுக்கும் கவிதை போன்ற ஒரு காதல் படத்தை கொடுத்தார்…இந்நிலையில் அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கின்றது..இப்படி ஒரு சோகமா என பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top