Connect with us

“இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முடிந்தது திருமணம்..! வாழ்த்திவரும் பிரபலங்கள்!”

Cinema News

“இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முடிந்தது திருமணம்..! வாழ்த்திவரும் பிரபலங்கள்!”

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்று நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமாகி அதன் பின்னர் ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பாகீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான விஷாலின் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று இந்த திருமணம் இனிதாக நடந்தது.

இந்த திருமணத்தில் விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Cinema News

To Top