Connect with us

தூம் பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரைத்துறையினர்..!!

Cinema News

தூம் பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரைத்துறையினர்..!!

பாலிவுட் திரையுலகில் தூம் என்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமாகி உள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் சினிமாவில் கடந்த 2004ல் வெளியாகி தூம் படத்தின் மூலம் உலகெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் சஞ்சய் காத்வி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர்.

அதேபோல் 2006ல் சஞ்சய் காத்வி இயக்கத்தில் வெளியான தூம் படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் காத்வி இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.56 வயதாகும் அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . இன்னும் மூன்று தினங்களில் சஞ்சய் காத்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் மாரடைப்பால் காலமாகி உள்ளது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

திரையுலகில் தனக்கென தனி பெயரையும் புகழையும் சம்பாதித்த இயக்குநர் சஞ்சய் காத்வியின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Cinema News

To Top