Connect with us

தோனி 2 – 3 ஓவர்கள் மட்டுமே விளையாடுவார் – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளெமிங் அதிர்ச்சி தகவல்..!!!

Featured

தோனி 2 – 3 ஓவர்கள் மட்டுமே விளையாடுவார் – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளெமிங் அதிர்ச்சி தகவல்..!!!

நடப்பாடுகாண ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான விளையாடி வரும் தல தோனியின் கடைசிநேர அதிரடியான பேட்டிங் குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளெமிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது விளையாட்டை சிறப்பாகவும் நேர்மையாகவும் விளையாடி வரும் நிலையில் இளம் புயல் ருதுராஜ் தலைமையில் விளையாடி வரும் சென்னை அணியும் தனது வெறித்தமான ஆட்டத்தை ஒவ்வரும் போட்டியிலும் காட்டி வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை அணியின் முக்கிய வீரரான தல தோனியின் இருந்து நேர பேட்டிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடிய போட்டிகளில் கடைசி ஓவர்களில் மட்டுமே விளையாடி வரும் தோனி அதிலும் அதிரடி காட்டுகிறார்.

இந்நிலையில் தோனியின் இந்த இறுதி நேர அதிரடி குறித்து மனம் திறந்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளெமிங் கூறியதாவது :

தோனி நிறைய நேரம் பேட்டிங் ஆடுவதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்தான். ஆனால், முழங்கால் காயத்தில் இருந்து தோனி இன்னும் மீண்டு வருவதால், தன்னுடைய ஆட்டத்தை 2-3 ஓவர்களுக்கு அவர் சுருக்கிக் கொண்டுள்ளார்.

பயிற்சியின்போதும் சரி, போட்டியிலும் சரி, மிகக் குறைவான நேரமே அவர் பேட்டிங் செய்கிறார். அதுதான் சரியாகவும் இருக்கும். சீசன் முழுவதும் அவர் விளையாட வேண்டும் எனப்தற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்டீஃபன் ப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top